கல்வி
கல்வி, பயிற்சி மற்றும் தொடர்பாடல் ஆகியவை தாவரவியல் பூங்காக்களின் முக்கிய செயல்பாடுகளாகும்
தாவரவியல் பூங்காக்களில் கல்வி மற்றும் பயிற்சி என்பது சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் முதல் பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் பாடநெறிகளை நடாத்துதல் வரையிலான பரந்த விடயங்களை உள்ளடக்கியதாகவும் தனிப்பட்ட கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்திலும்; அமைந்துள்ளது. இப் பிரிவின் கல்வி; நிகழ்ச்சித் திட்ட நடவடிக்கைகள் முறையாகத் திட்டமிடப்பட்ட அணுகுமுறையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு காலத்திற்குகாலம் மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம் படுத்தப்படுகின்றது. மேலும் சிறந்த கற்றல் சாதனங்களின் பயன்பாட்டுடன் அது பெற்றுள்ள அனுபவத்தின் ஊடாக >பாடத்திட்டத்தை மையப்படுத்திய பல்வேறு அமர்வுகள்>தாவரவியல் கல்வி; மற்றும் அது தொடர்பிலான இதர துறைகளை உயிரோட்டமான வழி முறைகளை கையாண்டு பங்கேற்பு மற்றும் கூட்டாக கற்றல் அணுகு முறைகளில் கவனம் செலுத்தி முழுமையான கல்வியை வழங்குகிறது.
அனைத்து தாவரவியல் பூங்காக்களும் பூச் செடியியல் இயற்கை தோட்டக்கலை>சுற்றுச்சூழல் கல்வி>உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் தாவரப் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றில் பல்வேறு வகையான கற்கை நெறிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்குகி வருவதுடன்>ஒருநாள் குறுகிய காலப் பயிற்சிகள் மற்றும் 02 வருட டிப்லோமா பாடநெறிகளும் நடாத்தப்படுகின்றன>இவற்றின் போது விரிவுரைகள் ஆய்வரங்குகள்>கண்காட்சிகள்>பயிற்சிப் பட்டறைகள்>விஷேட நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் களப் பயணங்கள் என பல்வேறுபட்ட கற்பித்தல் முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன
எமக்கு என்ன வழங்க முடியும்
பின்வரும் தேசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
- இலங்கையில் பூ வளர்ப்புத் துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை முழுமையாகக் குறிப்பிடுவதன் மூலம் கோட்பாட்டு கொள்கைகளின் நடைமுறை பயன்பாடுகளை உறுதிசெய்தல்
- இலங்கையில் வேலையற்ற இளைஞர்களின் பூ வளர்ப்பு மற்றும் நில வடிவமைப்பு அலங்காரம் வடிவமைப்புகளில் திறன்களையும் புரிதலையும் வளர்த்தல் .
- தோட்டக்கலை வசதிகளை மேம்படுத்துவதற்கான திறனை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
- பூ வளர்ப்பு மற்றும் நிலத்தோற்றத் தோட்டக்கலையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழிகளை வழங்குதல்
மேலதிக விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
(+94) 081 238 8238

