En   ta

ஹாட் லைன் : (+94) 081 238 8654 

மின்னஞ்சல்

deptnbg@gmail.com

திறந்திருக்கும் நேரம்

365 Days:7.30am to 6.00pm

எம்மை பற்றி...

இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின் நீண்டதும் பெருமைமிக்கதுமான வரலாறானது கைத்தொழில் மாற்றற்கள்,போர்கள் , தொற்று நோய்கள் ,இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் என்பவற்றின் தாக்கத்தினால் தடைகளை கண்டுள்ளது. இவ்வரலாறு நெடுகிலும் தாவரச் சேகரிப்புகள் மேம்படுத்தப்பட்டும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டும் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து தற்போது இலங்கையின் சிறப்புமிக்கதோர் தேசிய சொத்தாகத் தாவரவியல் பூங்காக்கள் திகழ்கின்றன.

பொழுதுபோக்கிற்கான சிறந்த தளமாக விளங்கும் இப் பூங்காக்கள் உலகெங்கிலும் காணப்படுகின்ற தாவரங்களின் மாதிரிகளை பேணிப் பாதுகாத்து தாவர இராச்சியத்தின் பல்வகைமையினையும். அழகையும் பேணும் இடமாகவும்>தாவரங்கள் பற்றிய அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும்> தாவரப் பாதுகாப்பு>பூச்செடியியல்>இயற்கை மீதான நேசம்>போன்ற பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்வதற்கான மத்திய நிலையங்களாகவும் செயல்படுகின்றன. .வருடந்தோரும் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பூங்காக்களைப் பார்வையிட வருகை தருகின்றனர்.இதற்கு மேலதிகமாக இந்நாட்டின் பாடசாலை மாணவர்களில் 5% த்தினர் இப் பூங்காக்களை வருடந்தோரும் தரிசிக்கின்றனர்

img
img

Welcome to botanic Gardens Sri Lanka.

அனைத்து தாவரவியல் பூங்காக்களும் (05 தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஒரு மருத்துவ பூங்காவும்) தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப் பூங்காக்களை நிர்வகித்து சிறப்பாக பராமரிப்தற்காக சுமார் 1000 பேர் பணிபுரிகின்றனர். திணைக்களத்தின் கீழ் செயல்படும் பெரும்பாலான தாவரவியல் பூங்காக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டவைகளாகும். பேராதனை அரச தாவரவியல் பூங்கா (1821); ஹக்கல தாவரவியல் பூங்கா (1861) மற்றும் கம்பஹா ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா (1876) என்பன ஆங்கிலேயரால் அயல் நாட்டுப் பொருளாதாரத் தாவரங்கள் மீதான பரிசோதனைகளை மேற்கொள்ளவும்>இத் தீவின் தாவரச் செல்வத்தை ஆராயவும் நிறுவப்பட்டன

இலங்கையில் பொருளாதார மற்றும் சுற்றாடல் அபிவிருத்திக்கான அனைத்து முக்கிய தாவரங்களும் இந் நிறுவனஙகளின் ஊடாவே அறிமுகப்படுதடதப்பட்டன. உலர் வலயத் தாவரங்களைப் பாதுகாப்பதற்காக அம்பாந்தோட்டையிலும் (அதாவது 130 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட முதலாவது தாவரவியல் பூங்கா) மற்றும் ஈர வலயத் தாவரங்களின் வெளிவாரிப் பாதுகாப்பிற்காக அவிசாவளையிலும் பூங்காக்கள் நிறுவப்பட்டன. இப் பூங்காக்களுக்கு மேலதிகமாக> இலங்கையில் மருத்துவத் தாவரங்களின் பாதுகாப்பு>நிலைபேறான பயன்பாடு மற்றும் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக 1950களில் கனேவத்தையில் ஒரு மருத்துவ தாவரவியல் பூங்காவும் நிறுவப்பட்டது.

தேசிய தாவரக்கயமானது தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் முக்கியமானதொரு பிரிவாகும். இது பதினைந்து தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறுபட்ட மாற்றங்களுடன் திணைக்களத்தின் சின்னமாகவும் முக்கிய அங்கமாகவும் திகழ்கிறது. பூங்காக்களில் காணப்படுகின்ற அனைத்து தாவர சேகரிப்புகளும் இங்கு உலர்த்திப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. அவ்வாரான சுமார் 80 ஆயிரம் மாதிரிகள் அறிவியல் துறைகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி என்பவற்றிக்கு முக்கியமான ஆதாரங்களாக உள்ளதுடன்>அவை வௌ;வேறு தாவரங்கள்>அவற்றின் பெயரிடல்> வகைப்பாடு>நிலைபேறான பயன்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான குறிப்புகளாகவும் அமைந்துள்ளன.

இலங்கையில் உள்ள தாவரவியல் பூங்காக்கள்>இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல்களில் காணப்படுகின்ற தாவர வளங்களைப் பற்றி கற்பதற்கும்>தாவரங்களின் நிலைபேறhன பாதுகாப்பை பேணுவதற்கும் பொதுமக்களுக்கு வாய்ப்புகளை வழங்;கி மிகச்சிறந்த தாவரவியல் பூங்காக்களாக பரவலாக அறியப்படுகின்றது.இலங்கையில் உள்ள தாவரங்களுக்கான தேசிய சிவப்புப் பட்டியல் தொடர்பிலான அதிகாரத்தையும் கொண்டுள்ள இது பல்லுயிர் பெருக்கம்>வெளிவாரிப் பாதுகாப்பு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு உத்திகளை மேற்கொள்ளல் போன்ற பணிகளிலும் பங்களிப்புச் செய்துவருகின்றது. தேவைக்கேற்ப புதிய தாவரவியல் பூங்காக்களை உருவாக்குதல் மற்றும் புதிய விஞ்ஞான பூர்வ எல்லைகளைத் தேடுதல் என்பனவும் திணைக்களத்தின் பொறுப்பாக உள்ளதுடன் சதுப்பு நில தாவரங்களைப் படிக்கவும்>பாதுகாக்கவும்>ஆராய்ச்சி செய்யவும் காலி அக்மீமனப் பகுதியில் பின்னதுவ எனும் இடத்தில் புதிதாக சதுப்புநில தாவரவியல் பூங்காவை உருவாக்குவதற்கான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறு மட்டத்தில் தாவரங்களின் ஆராய்ச்சி அங்கீகாரத்திற்காக புதியதொரு மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தையும் அமைப்பதற்கான ஆரம்ப வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எமது முன்னுரிமைகள்

மனிதர்களும் இயற்கையும் செழிப்பாக வளரும் ஓர் உலகம்

தாவரப் பாதுகாப்பின் இப் பிரதான பகுதிகளில் கவனம் செலுத்துவதன் ஊடாக இந்த இலட்சிய இலக்கை அடைவதற்காக நாம் பணியாற்றுகிறோம்..

image

எமது பணி -இயற்கையான மற்றும் செயற்கையான சூழல்களில் காணப்படும் தாவர வளங்கள் பற்றி ஆய்வு செய்தல், அவற்றின் நிலையான பேணுகை மற்றும் அவற்றின் மதிப்பை அறிந்து கொள்ளும் பணிகளுக்காக பொது மக்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அவர்களை தாவரங்கள் பால் சமீபமாக்குதல்.

எமது நோக்கு - தாவரவியல் மற்றும் அழகியல் நடவடிக்கைகளை உயர் மட்டத்தில் பேணிக்கொண்டு அயன வலயத்தின் மிகச் சிறந்த தாவரவியல் பூங்காவாக மாறுதல்

கலாநிதி. தம்மிக படபெந்தி

சுற்றாடல் அமைச்சர்

அன்டன் ஜயக்கொடி

சுற்றாடல் பிரதி அமைச்சர்

எமது திணைக்களம்.

நிறுவனக் கட்டமைப்பு

தாவரப் பாதுகாப்பின் இப் பிரதான பகுதிகளில் கவனம் செலுத்துவதன் ஊடாக இந்த இலட்சிய இலக்கை அடைவதற்காக நாம் பணியாற்றுகிறோம்