தேசிய தாவரக்கயம்
Nதேசிய தாவரக்கயமானது இலங்கையின் தாவரங்களை அங்கீகரிப்பதற்குப் பொறுப்பான பிரதான தேசிய நிறுவனமாகும். இலங்கையின் தாவரங்களின் தாவர ஆய்வு மற்றும் வகைபிரித்தல் போன்ற பணிகளில்தேசிய தாவரக்கயம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் தாவரங்களின் உலர்ந;த் மாதிரிகளை பாதுகாத்து வைக்கும் இடமே தேசிய தாவரவக்கயமாகும். இங்கு அதிகமான தேசிய மற்றும் வெளிநாட்டுத் தாவரங்களின் மாதிரிகள் முறையாக>ஆய்வுகளுக்கும் பரிசோதனைளுக்குமெனப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு தாவரங்கள் பற்றிய 3500 க்கும் மேற்பட்ட புத்தகங்களும் சஞ்சிகைகளும் இதன் நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
தாவரவியல் பூங்கா தரவுத் தளத்தின் அங்குரார்பன நிகழ்வு
இலங்கை தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் தரவுத் தளத்தின் திறப்பு விழா
வரலாறு
இலங்கை தேசிய தாவரக்கயம் , பேராதனை
பேராதனை தேசிய தாவரக்கயமானது , 1818 முதல் 1825 வரை தாவரவியல் பூங்காவின் கண்காணிப்பாளராகவும், 'இலற்கையில் வளரும் பூர்வீக மற்றும் வெளிநாட்டு தாவரங்களின் பட்டியல்' (1824) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான அலெக்சாண்டர் மூன் அவர்களின் உலர்ந்த தாவரச் சேகரிப்புடன் தொடங்கியது. மூன் அவர்கள் இங்கிலாந்தில் உள்ள கியூ தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள தாவரக்கயத்தில் இருக்கும் தாவரச் சேகரிப்பிற்கு ஓத்தான ஒரு தொகுப்பை இங்கு சேகரித்தார், அவரது மாதிரிகளில் சிலது மட்டுமே தற்போது Pனுயு இல் காணப்படுகின்றன. அவரது உடனடி வாரிசுகள் தாவரக்கயத்திற்கு கணிசமான சேர்த்தல்களைச் செய்தனர், ஆனால் அவற்றின் மாதிரிகள், பெரும்பாலும் பெயரிடப்படாததால், 1820 களின் பிற்பகுதியில் பிரித்தானிய ஆளுநர் சேர் ஸ்டீவர்ட் மெக்கன்சி, இந்தியாவின் மெட்ராஸில் பணிபுரிந்த தாவரவியலாளரான ரொபர்ட் வைட்டிடம் இம் மாதிரிகளுக்கு பெயரிடவும், இலங்கை தாவரங்களின் புதிய பட்டியலைத் தொகுத்துத் தருமாறும்; கோரினார்;, பின்னர் அதன் பெயர்கள் திருப்தியற்றதாகவும் முழுமையற்றதாகவும் கண்டறியப்பட்டு,அத் தொகுப்பு வைட்டுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அது ஒரு பட்டியலைத் தொகுக்க போதுமானதாக இல்லை என்று அவர் கண்டறிந்தார்.;, 1844 ஆம் ஆண்டில ;இந்தியாவின் நீலகிரிப் பகுதிகளில் சேகரித்த தனது சொந்த சேகரிப்பிலிருந்து ஆயிரம் மாதிரிகள் மற்றும் பேராதனை பூங்காவின்; புதிய கண்காணிப்பாளராக இருந்த ஜார்ஜ் கார்ட்னரால் சேகரிக்கப்பட்ட சுமார் ஆயிரம் மாதிரிகள் ; திருப்பி அனுப்பினார். கார்ட்னர் இலங்கையில் நிறைய சேகரிப்புகளைச் செய்த போதிலும் அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மூலிகைப் சேகரிப்pன் பெரும்பகுதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டது, அவை தற்போதும அங்கேயும் கியூ பூங்காவிலும் உள்ளது.
PDA இல் உள்ள C.P. தொடரின் பெரும்பாலான மாதிரிகள் லேபிள்கள் இல்லாமல் உள்ளதுடன் உண்மையான சேகரிப்பாளரின் பெயர் அல்லது த்வைட்ஸினால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் பிற சேகரிப்பு தொடர்பிலான தரவு கொடுக்கப்படவில்லை. இருப்பினும், சில தாள்களில், சேகரிப்பாளரின் பெயர,; சேகரிக்கப்பட்ட இடம் மற்றும் தேதி, அனைத்தும் பென்சிலிலால் எழுதப்பட்டுள்ளதால் இப்போது தெளிவாகத் தெரியவதில்லை தாவரக்கயத்தின் ஆரம்ப நாட்களில் பங்களித்த பல சேகரிப்பாளர்களின் பெயர்கள் சில தாள்களில் காணப்படுகின்றன. புpரித்தானிய இராணுவத்தின் கேர்னலாக இருந்து பின்னர் ஜெனரலாகப் பணியாற்றிய ஜே.டி. வாக்கர் மற்றும் அவரது மனைவி 1830 முதல் 1840 வரையிலான காலப்ப பகுதியில் இலங்கையில் தாவர மாதிகளைச் சேகரித்தனர். அவர்களின் சில மாதிரிகள் பேராதனையிலும் உள்ளன, இருப்பினும் பெரும்பாலானவை கியூ பூங்காவில் உள்ளன. அவர்களால் சேகரிக்கப்பட்ட புதிய இனங்களின் சேகரிப்பை பு.யு. வாக்கர் - அர்னாட் 'Pரபடைடரள Pடயவெயசரஅ ஐனெயைந ழுசநைவெயடளை' (1836) நூலாகத் தொகுத்தார் பின்னர் அது . ஹூக்கர், வைட் மற்றும் ஏனையோரல் வெளியிடப்பட்டது
1836 ஆம் ஆண்டு வாக்கர்ஸ் உடன் இணைந்து வைட் இலங்கையில் தாவர மாதிகளைச் சேகரித்தார். பிரிட்டிஷ் சிவில் இன்ஜினியரான வில்லியம் பெர்குசன் 1839 முதல் 1887 வரை இலங்கையில் வாழ்ந்தார். அவர் ஒரு உற்சாகமான தாவரவியலாளர் மற்றும் சேகரிப்பாளராக இருந்தார், மேலும் அவரது பல மாதிரிகள் PPDA இல் உள்ளன. 1846 முதல் 1894 வரை இலங்கையில வாழ்ந்த தொழிலதிபரும் ;” A Catalogue of Ferns Indigenous to Ceylon” (1873) and ” A Checklist of Ceylon Ferns” (1879) ஆகிய இரண்டு துண்டுப்பிரசுரங்களின் ஆசிரியருமான ஜார்ஜ் வோல், அவர்களின் சேகரிப்பு குறிப்பிடத்தகதாகும. அவரது சேகரிப்புகள் முக்கியமாக பன்னங்களாகும் அவற்றில் பல இப்போது Pனுயு இல் உள்ளன. “A Handbook to the Flora of Ceylon” (1896 – 1900) ) இன் ஆசிரியர் ஹென்றி ட்ரைமென் 1880 முதல் 1896 வரை தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் பல சேகரிப்புகள் தாவரக்கயத்தில் சேர்க்கப்பட்டன ஆனால் ட்ரைமென் அல்லது பிற சேகரிப்பாளர்களின் பெயர் தாள்களில் அரிதாகவே காணப்படுகிறது. சேகரிப்பாளரின் பெயரைத் தவிர்க்கும் பாரம்பரியம் தொடர்ந்து இருந்து வந்தது. டிரிமனின் வாரிசுகள், குறிப்பாக ஜே.சி. வில்லிஸ் (இயக்குனர், 1896-1911) மற்றும் அரசாங்க தாவரவியலாளர்கள் ஏ.எச்.ஜி. ஆல்ஸ்டன், கே.எல்.டி. அமரதுங்க (1961-1985) மற்றும் ஏ.எச்.எம். ஜெயசூர்யா (1985-1996) ஆகியோர் சேகரிப்பில் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளைச் சேர்த்தனர். டி.பி. 'சிலோன் ட்ரீ' (1959) என்ற புத்தகத்தின் ஆசிரியரான வொர்திங்டன், தனது மூலிகைப் பூங்காவை கியூவிடம் விட்டுச் சென்றார். அதிலிருந்து கியூ தனது பல நகல்களை பேராதனைக்கு கடனாகக் கொடுத்தார். சிலோன் தாவரத் மருசீரமைப்பு திட்டங்களில் பணிபுரிந்த தாவரவியலாளர்கள், ஸ்மித்சோனியன் நிறுவனம் (1969 - 1979) (ஸ்மித்சோனியன் ஒரு சுற்றுச்சூழல் திட்டத்தையும் ஆதரித்தது) மற்றும் பிரிட்டிஷ் ழுனுயு (1988 - 1997) ஆகியவற்றால் தாவரக்கயம் நிர்வகிப்பட்ட காலத்தில் அதன் சேகரிபிற்கு ; கணிசமான பங்களிப்புகளைச் செய்தனர். ஸ்மித்சோனியன் அனுசரனை பெற்ற திட்டங்கள் கசுமார் 40000 மாதிரிகளையும் ODA அனுசரனையுடன் சுமார் 20000 மாதிரிகளையும் PDA சேர்த்தன. மேலும் இத் திட்டங்களில் பங்கேற்கும் தாவரவியலாளர்கள் அவற்றின் புதுப்பிக்கப்பட்ட பெயர்களுடன் மாதிரிகளை விளக்கினர். தற்போது PDAஇல் உள்ள மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை சுமார் 160000 ஆகும்
சேவைகள்
முறையான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மேலதிமாக தேசிய தாவரக்கயம் பொதுமக்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகிறது
- தாவர அடையாளம் காணல் மற்றும் தகவல் சேவை.
- தாவரங்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளல்,தாவர அடையாளம் காணல்,உலர் மாதிரிகளைத் தயாரித்தல்,ஆவணப்படுத்துதல் மற்றும் மீளாய்வுகள் என்பன எமது பிரதான பணிகளாகும்.
- தாவர அங்கீகாரம் மற்றும் வவுச்சர் மாதிரிகளைப் பாதுகாத்தல்
- தாவர ஆய்வு - தாவர மாதிரிகளை ஆய்வு செய்தல், சேகரித்தல் மற்றும் தாவரம் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.
- நாட்டின் தாவர செல்வத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் அவை குறித்த வெளியீடு.
வெளியீடுகளைத் தயாரித்தல்;
தேசிய தாவரங்கள் (சிலோன் தாவரங்கள் தொகுதி ஐ முதல் ஓஏ வரை).
மாகாண மற்றும் மாவட்ட தாவர களப் பயணங்கள்
கள வழிகாட்டிகள்.
புத்தகங்கள்இ சரிபார்ப்புப் பட்டியல்கள்.
தாவரக்கய் நுட்பங்கள், மருத்துவ தாவரங்கள்இ,அச்சுறுத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய சிற்றேடுகள்.
- இலங்கையின் தேசிய சிவப்புப் பட்டியல் தயாரிப்பில் ஈடுபடுங்கள்.
- கற்பித்தல்
பல்கலைக்கழகம் மற்றும் பhடசாலை மாணவர்கள்இ ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான கல்வித் திட்டங்கள்; விரிவுரைகள்இ பணிமனைஇ விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கள ஆய்வு ஆய்வுகள் நடத்துதல்:
தாவர அடையாளம் காணல்.
தாவரக்கய நுட்பங்கள்.
பல்லுயிர் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு.
மருத்துவ தாவரங்கள்.
அருகிவரும் தாவரங்கள் போன்றவை.
தாவரக் குழுக்களை அடையாளம் காண சிறப்பு ஆதரவை வழங்குதல்; பூக்கும் தாவரங்கள்இ ஃபெர்ன்கள், பிரையோபைட்டுகள் , லைகன்கள்.
- தகவல் மற்றும் பொருள் பரிமாற்றம்
- தாவரவியலாளர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்கு நூலக வசதிகளை வழங்குதல்.
தாவரக்கயத்திற்கு வருபவர்களுக்கான விதிமுறைகள்
திறந்திருக்கும் நேரம்: வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரைஇ முன்பதிவு மூலம் மட்டுமே உள் நுழைவு.
- கொண்டுவரப்படும் தாவர மாதிரிகளைஇ பணிப்பாளர்இ உதவிப் பணிப்பாளர் இ முறையான தாவரவியலாளர்ஃ காப்பாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியிடம் காண்பித்த பின்னர்இ தாவரக்கயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- புதிய தாவரப் பொருட்களைக் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது
- பரிசோதனையின் போது தாவரக்கய மாதிரிகள் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும் மற்றும் பின்வரும் ஆலோசனைகளை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.
- புத்தகத்தின் பக்கங்களாக மாற்றக்கூடாது.
- மாதிரிகளின் மேல் கனமான பொருட்களையோ அல்லது புத்தகத்தையோ வைக்காதீர்கள், அவற்றை முகம் குப்புறப் படுக்க வைக்கவும்.
- மாதிரியின் எந்தப் பகுதியையும் அகற்றக்கூடாது
- தாவரக்கய தாள் மற்றும் லேபிளில் எழுதவோ அல்லது குறிக்கவோ வேண்டாம்.
- கோப்பு உறைகளுக்குள் மாதிரிகளை ஒழுங்காக வைக்கவும்.
- அலமாரிகளில் இருந்து கோப்புகளை அகற்றி திருப்பி வைக்கும் போது அவற்றைக் கலக்க வேண்டாம்.
- அலமாரியைப் பயன்படுத்திய பிறகு அவை சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- தாவரக்கய தாள்கள் அல்லது கோப்புறைகளை அகற்றுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
- புகைப்படம் எடுப்பதற்காக கேமராக்கள் மற்றும் பிற மின் சாதனங்களை எடுத்துச் செல்ல விஷேட அனுமதி பெற வேண்டும்
- மேற்குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்த தாவரக்கய ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் மூலதாரங்கள்
உலர்ந்த தாவர மாதிகளின் சேகரிப்பு
இது தற்போது ஆஞ்சியோஸ்பெர்ம்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள்இ ஃபெர்ன்கள், பிரையோபைட்டுகள்இ லைகன்கள் மற்றும் ஆல்காக்களின் என சுமார் 160000 உலர்ந்த தாவர மாதிரிகளைக் கொண்ட முக்கிய தாவர களஞ்சியமாகும். இதில் 450 வகை மாதிரிகள் அடங்கும். இந்த மாதிரிகளில் சில சுமார் 180 ஆண்டுகள் பழமையானவை மற்றும் மதிப்புமிக்க வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளன. தாவரக்கயத்தில் 450 க்கும் மேற்பட்ட ‘வகை மாதிரிகள்’ உள்ளன – இனங்களை விவரிக்கும் போது முதலில் பயன்படுத்தப்பட்ட மாதிரிகள்இ சில 150 ஆண்டுகளுக்கும் முன்னயவை .
குவலையில் தாவக்கயசேகரிப்பு.
புதிய தாவரக்கய சேகரிப்பு.
நூலகம்
வகைபிரித்தல் இலக்கியம் பற்றிய கிட்டத்தட்ட 3000 புத்தகங்களின் தொகுப்பு மற்றும் இலங்கையின் தாவரவியல் வரலாற்றின் முக்கியமான மைல்கற்களைக் குறிக்கும் மதிப்புமிக்க தாவரவியல் விளக்கப்படங்களின் தொகுப்பு உள்ளது.
துணை சேகரிப்புகள்
தாவரவியல் வண்ண விளக்கப்படங்கள்.
யாம்இ பழங்கள் மற்றும் விதைகள் சேகரிப்பு.
புகைப்படங்கள்
Contact us for more details
(+94) 081 238 8053

