ஈர வலய தாவரவியல் பூங்கா அவிஸ்ஸாவலை
இலங்கையில் உள்ள 5 தாவரவியல் பூங்காக்களில் புதிதாக உருவாக்கப்பட்ட அவிசாவெல்லாவில் உள்ள சீதாவாக்கை ஈர வலய தாவரவியல் பூங்காவானது 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது
பூங்காவின் அமைவிடம்
சீதாவக ஈர வலய தாவரவியல் பூங்காவானது மேல் மாகாணத்தில் அவிசாவளைப் பகுதியில் இலுக்கோவிட்ட எனும் இடத்தில் சுமார் 42.49 ஹெக்டயார் நிலப்பரப்பில் அமைந்துள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் மிகவும் உணர் திறன் தாவர இனங்கள் நிறைந்துள்ள காடுகள் இத் தீவின் தென்மேற்கு தாழ் நில ஈர வலய பகுதியிலேயே பரவிக் காணப்படுகின்றன. இக்காடுகள் துண்டாடப்பட்டும் சிதைந்தும் குறிப்பாக நகரமயமாக்கல் காரணமாக அருகியும் வருகின்றன. உள்ளுர் தாவரங்களில் பெரும்பாலானவை அதிக உணர்திறன் கொண்டவையானதால் அவற்றை இத் தீவின் ஏனைய இடங்களில் சிறப்பாக வளர்வது மிகவும் கடினம். இத் தாவரவியல் பூங்கா தாழ் நில ஈர வலய பகுதியில் காணப்படுகின்ற தாவரங்களின் மீட்பு மையமாக நிறுவப்பட்டதுடன் இங்கு அச்சுறுத்தலுக்குட்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகக் கூடிய ஆபத்தை கொண்டுள்ள தாவரங்கள் திருப்திகரமாக பாதுகாக்கப்படுகின்றன. இந்த தாவரவியல் பூங்காவின் முக்கிய நோக்கம் இலங்கையின் தாழ்நில ஈர வலய தாவரங்களை பாதுகாப்பதாகும். சுற்றுலாத் துறையை ஊக்குவித்து மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாற்றுவதன் ஊடாக இப்பகுதியில் வாழும் மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளையும் இப்; பூங்கா வழங்குகின்றது. தாவரவியல் பூங்கா பூச்செடியியல் துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சித் திட்டங்களை நடத்துவதுடன் ஏற்றுமதி சார்ந்த பூ வளர்ப்பிற்கான பயிற்சி நிலையங்கள் தாழ் நில ஈர வலயப் பகுதிகளில்; அமைப்பதனையும் நீண்டகால திட்டமாக கொண்டு செயல்பட்டுவருகின்றது. மேலும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான ஆய்வகமாகவும் செயல்படுகிறது. சிறப்பாக பராமரிக்கப்பட்டுவரும் சீதாவாக்கா ஈர வலயத் தாவரவியல் பூங்கா>சிறந்ததொரு பொழுதுபோக்கு தளமாகவும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்றவிதத்திலான அழகான இடத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் கண்கவர் காட்சிகளை அனுபவிக்க வருபவர்களுக்கு இப்பூங்காவில் அமைந்துள்ள"கும்புக்" தாவரப் பகுதியில் உள்ள நீர் நிலைகள்>நீர்த் தேக்கத்தில் படகு சவாரிகள்>வனப்பகுதி வழியாக சுற்றுச்சூழல் அழகினை இரசித்தவன்னம் பூங்காவின் உச்சிக்கு செல்வதற்கான சுமார் ஒருமைல் தூரத்தை மெதுவாக ஏறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதை மற்றும் காட்சி மையம் என்பன அற்புதமான அம்சங்களாகும்.
Locations
What you can see
visitors are advised to walk round the gardens if they wish to explore the many beautiful places in this very compact garden.
4.5 VISITORS RATING
Trusted By 1000+ Visitors
- ரோஜா தோட்டம்
- பூங்காவின் உச்சியில் அமைந்துள்ள இது பல்வேறு வகையான ரோசாக்களைக் கொண்ட அழகான பாத்திகளை கொண்டுள்ளது.
- காட்சி மையம்
- பூங்காவின் நடுவில் அமைந்துள்ள இந்த அழகிய காட்சிப் மையமானது உச்சிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இங்கு சிறிது நேரம் இங்கு ஓய்வெடுத்து பூங்காவின் அழகையும்இ சுற்றியுள்ள மலைகளுக்கு அப்பால் உள்ள காட்சியையும் இரசித்து மகிழலாம்
- குபுக் புல்வெளி
- இப் பூங்காவின் மிகவும் பிரபலமான இயற்கை எழில் கொஞ்சும் இடமாக கும்புக் (டெர்மினாலியா அர்ஜுனா) மரங்களைக் கொண்ட பெரிய புல்வெளிப் பகுதி உள்ளது. இந்தப் பகுதி அருவியாக ஓடும் நீர் ஓடைகள் மற்றும் ஏரிகளால் சூழப்பட்டுள்ளதுடன் குளிர்ந்த நிழல் தரும் சூழலைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதி புகைப்படக் கலைஞர்களிடையே மிகவும் பிரபலமானது..
- பன்னத் தோட்டம்
- இப் பன்னத் தோட்டத்தில் புதர் பன்னங்கள் இ மர ஃபெர்ன்கள்இ கொடிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பன்னங்கள் உள்ளன.
- ஜப்பானிய தோட்டம்
- ஜப்பானிய தோட்டம் இயற்கை கற்கள்இ கூழாங்கற்கள் மற்றும் வெள்ளை மணல் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அமைதியான இடமாகும். பார்வையாளர்கள் குட்டையான மற்றும் வெளிர் நிற மலர் இனங்களைக் கொண்ட மலர் படுக்கைகளையும்இ வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கத்தரிக்கப்படும் பசுமையான மரங்கள் மற்றும் புதர்களையும் காணலாம்.
- வசதிகள் மற்றும் சேவைகள்
- பூங்காவில் நான்கு கோல்ஃப் கார்கள் இயங்குகின்றன. உணவு மற்றும் பானங்களை வாங்குவதற்கு பார்வையாளர்கள் உணவகத்தைப் பயன்படுத்தலாம். பார்வையாளர்கள் அருகிலுள்ள விற்பனை நிலையத்திலிருந்து தாவரங்களை (பூச்செடிகள்இ அலங்காரச் செடிகள்இ ஆர்போரேட்டம் செடிகள்இ மருத்துவச் செடிகள் போன்றவை)இ வெளியீடுகள் மற்றும் நினைவுப் பொருட்களையும் வாங்கலாம். பூங்காவில் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடமும் உள்ளது. பிரதான ஏரியில் ஸ்வான் துடுப்புப் படகுகளை வாடகைக்கு எடுக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருமண படப்பிடிப்புகள் மற்றும் வணிக புகைப்பட படப்பிடிப்புகள் ரூ வீடியோ படப்பிப்பு ஆகியவற்றிற்கும் இது ஒரு கவர்ச்சிகரமான மற்றும் பிரபலமான இடமாகும்.
7.30 AM - 6.00 PM
Opening Hours
7.30 AM - 5.00 PM
Ticketing Hours
365 Days
Open
For Overseas Tourist
Entrance Fee
Come and explore the spectacular plant life of Sri Lanka
Foreign Adult
(Elder than 12)
LKR3,540/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.
Foreign Student
(Must have proof)
LKR2,360/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.
Foreign Child
(5 to 12 years)
LKR1,770/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.










